உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்

நெய்வேலியில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க., இணைந்தனர்கடலுார் மேற்கு மாவட்டம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21 ஐ சேர்ந்த பா.ஜ., தமிழக வெற்றி கழகம் மற்றும் அ.ம.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி. மு.க., வில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், அவை த்தலைவர் நன்மாறபாண்டியன், நகர பொருளாளர் மதியழகன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கிளை செயலாளர்கள் சந்திரசேகரன், ஆறுமுகம், கலியன், அண்ணாதுரை, ரமேஷ், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை