முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி
கடலுார்: கடலுார், முதுநகர் பிலோமினாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சுதந்திர தினத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், கடந்த 2008ம் ஆண்டு படித்த மாணவிகள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியைகள் அல்போன்சா, ஆரோக்கிய செல்வி, குளோரி, லுாசி, சுகந்தி, ஸ்டெல்லா, விஜி, தனம் கலந்து கொண்டனர்.