உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்பேத்கர் சிலை உடைப்பு; வி.சி., சாலை மறியல்

அம்பேத்கர் சிலை உடைப்பு; வி.சி., சாலை மறியல்

சிதம்பரம்; சிதம்பரம், வடக்கு மெயின் ரோட்டில் பேட்டை பகுதியில் வி.சி., கட்சி கம்பத்துடன் அம்பேத்கர் சிலை உள்ளது. கோர்ட் உத்தரவின்படி, நேற்று மாலை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கொடிக்கம்பத்தை அகற்றினர். அப்போது அருகில் இருந்த அம்பேத்கர் சிலையின் தலைப்பகுதி கீழே விழுந்தது. இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, வி.சி., முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன் தலைமையில், சரித்திரன், பா.ஜ. நிர்வாகிகள் கோபிநாத், கணேசன், சரவணகுமார் என, 200க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பேட்டையில் இரவு 7:30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.தாசில்தார் கீதா, டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியல் 8:30 மணிக்கு கைவிடபட்டது. மறியல் காரணமாக கடலுார்-சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை