உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்

பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்

பண்ருட்டி : பண்ருட்டியில் நாளை பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்தும் நடைபயணத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கடலுார் வடக்கு மாவட்டம், பண்ருட்டி தொகுதிக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி நாளை (10ம் தேதி) வருகை தருகிறார். காலை 11:00 மணிக்கு சாத்திப்பட்டு ஊராட்சி, பலாப்பட்டு கிராமத்தில் பலா, முந்திரி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். மாலை 4:00 மணிக்கு பண்ருட்டி காந்திரோட்டில் இருந்து 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணம் அன்புமணி தலைமையில் நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடைபயணம் முடிந்து அவர் பேசுகிறார். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்திரளாக பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை