உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழமையான சுடுமண் பொம்மை பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

பழமையான சுடுமண் பொம்மை பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில், மிக பழமையான சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன. கடலுார் மாவட்டம், பைத்தாம்பாடி பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெண் உருவம் கொண்ட இரு கருப்பு நிற சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து அவர் கூறியதாவது: இங்கு, கண்டெடுத்த சுடுமண் பொம்மைகளின் உயரம் 5 செ.மீ., இரு சுடுமண் பொம்மைகளும் ஒரே அளவு கொண்டதாக உள்ளன. சுடுமண் பொம்மையின் முகம், ஆந்தை முகம் போல உள்ளது. கடந்த 1995 - 96ல் விழுப்புரம் அடுத்த சேந்தமங்கலத்தில் மாநில தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த சுடுமண் பொம்மை போலவே, பைத்தாம்பாடி பெண்ணையாற்றிலும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதனால், சோழர் கால மக்கள், பெண்ணையாற்று கரையோர பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர் என அறிய முடிகிறது. தற்போது, பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்ணரிப்பு காரணமாக சுடுமண் பொம்மைகள் பூமியின் மேற்பரப்பில் வந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி