உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணிடம் ரூ.5.7 லட்சம் மோசடி: ஆந்திர ஆசாமி கைது

 பெண்ணிடம் ரூ.5.7 லட்சம் மோசடி: ஆந்திர ஆசாமி கைது

கடலுார்: இன்ஸ்டாகிராம் மூலம் பரிகார பூஜை செய்வதாக கூறி புவனகிரி பெண்ணிடம் ரூ.5.70லட்ச ரூபாயை மோசடி செய்த ஆந்திர வாலிபரை கடலுார் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், புவனகிரியை சேர்ந்த பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு திருமண தடை பிரச்னைக்கு பரிகார பூஜை செய்வது சம்பந்தமாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்தார். அதில் இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் கூறியவாறு மூன்று தவணைகளாக 5 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் பரிகார பூஜை ஏதும் செய்யாததால், தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். புவனகிரி பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த நபரை மொபைல் போன் மூலம் சைபர் கிரைம் போலீசார், கண்டறிந்தனர். ஏமாற்றிய நபர் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், உய்யுரு பகுதியைச் சேர்ந்த தாமோதர் மகன் குடிவாடா யுவகல்யாண், 25, என தெரியவந்தது. அதையடுத்து, கடலுார் சைபர் கிரைம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ