உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலை கழகத்தில் மயக்கவியல் மருத்துவ பயிற்சி பட்டறை

அண்ணாமலை பல்கலை கழகத்தில் மயக்கவியல் மருத்துவ பயிற்சி பட்டறை

சிதம்பரம், : சிதம்பரம் மயக்கவியல் நிபுணர்கள் சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல், வலி மருத்துவத் துறை சார்பில், தேசிய அளவிலான மகப்பேறியல் மயக்க மருத்துவ பயிற்சி பட்டறை நடந்தது.பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறைக்கு, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி தலைமை தாங்கினார். சிதம்பரம் மயக்கவியல் நிபுணர் சங்கத் தலைவர் டாக்டர் சுப்பு லட்சுமி சுந்தரம் வரவேற்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர்கள் டாக்டர்கள் மருத்துவர் பாலாஜி சுவாமிநாதன், சசிகலா முன்னிலை வகித்தனர்.ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹீனா சான்வல், தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் கிருபாகரன், பொதுச் செயலர் டாக்டர் சீனிவாசன், பொருளாளர் டாக்டர் ஷண்முகவேலு, கல்வித் தலைவர் டாக்டர் செல்வகுமார், வருங்கால தலைவர் ராஜ்குமார், தேர்தல் அலுவலர் அமுதா ராணி ஆகியோர் பங்கேற்று பேசினர். முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். செய்தி மடல் வெளியீடு, மருத்துவர் சுப்புலட்சுபி சுந்தரத்தின் மயக்கவியல் தொடர்பாக எழுதிய தமிழ் கவிதை நூல்வெளி யிடப்பட்டது.ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் சீதாராமன், ராகுல், ராஜஜோதி கஜிதா மற்றும் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். சிதம்பரம் மயக்கவியல் நிபுணர் சங்கசெயலர் சந்தோஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி