மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
23-Sep-2025
கடலுார்; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க கடலுார் மாவட்ட பேரவைக் கூட்டம் சூரப்பநாயக்கன் சாவடியில் நடந்தது. கூட்டத்திற்கு கலைச்செல்வி தலைமை தாங்கி னார். அன்பரசு வரவேற்றார். சி.ஐ.டி.யூ., மாவட்டத்தலைவர் கருப்பையன் துவக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல், துணைத் தலைவர் ஜீவானந்தம், இணை செயலாளர் ஸ்டாலின் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் டெய்சி நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி 26,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக 10 லட்சம், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. வசந்தா நன்றி கூறினார்.
23-Sep-2025