உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாதுரை பிறந்தநாள் விழா

அண்ணாதுரை பிறந்தநாள் விழா

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலை நகர் தெற்கிருப்பில், அண்ணாதுரை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சியினருடன் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' என்ற உறுதிமொழியை ஏற்றார். நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், தொகுதி பொறுப்பாளர் பாரி, ஒன்றிய செயலாளர் சங்கர், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் தங்க அன்பரசு, வேலு, தேவிகா, விஜயலட்சுமி, நிர்வாகிகள் செல்வம், ஆனந்தன், கருணாநிதி, சக்திவேல், ரஞ்சித்குமார், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை