உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாதுரை பிறந்த நாள்: விரைவு சைக்கிள் போட்டி 

அண்ணாதுரை பிறந்த நாள்: விரைவு சைக்கிள் போட்டி 

கடலுார் : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, கடலுாரில் விரைவு சைக்கிள் போட்டி நடந்தது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் அண்ணா விரைவு சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, கடலுாரில் நேற்று காலை கூடுதல் கலெக்டர் பிரியங்கா ( வளர்ச்சி) தலைமை தாங்கி, விரைவு சைக்கிள் போட்டிகளை துவக்கி வைத்தார். 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவி களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப் பட்டன. கடலுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை