உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகள் நலச்சங்கம் வாயிற் கூட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகள் நலச்சங்கம் வாயிற் கூட்டம்

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம் நடந்தது. தொலைதுார கல்வி இயக்ககம் வாயிலில் நேற்று மாலை நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, அதிகாரிகள் நல சங்கத் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஜான், பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன் மற்றும் ரகு, ராஜன்பாபு மணிகண்டன், பொன்ராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், தொலைதுார கல்வி இயக்கக படிப்பு மற்றும் தகவல் மையங்களை மூடுவதை தடுத்து நிறுத்தி, தமிழக அரசு தனி அல்லது சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும், தொடர்பு அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகளுக்கு மட்டும் ஆண்டு ஊதிய உயர்வு, 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றாத நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி