உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு

அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு செய்தார்.சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு நேற்று வருகை தந்த எஸ்.பி., ராஜாராமன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும், பதிவேடுகள், வழக்கு கோப்புகளை பார்வையிட்டார்.தொடர்ந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள், கண்ணீர் புகை குண்டுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின், வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்த விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார். போலீசாரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.மேலும் அண்ணாமலை நகர் காவல் நிலைய கட்டடம் பழுதடைந்துள்ளதால், புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை