உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெரியப்பட்டு பள்ளியில் ஆண்டு விழா

பெரியப்பட்டு பள்ளியில் ஆண்டு விழா

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் விஜயலட்சுமிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !