உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அதிகாரிகள், அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை