மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் அதிகாரிகள்
02-Apr-2025
புவனகிரி: புவனகிரி பகுதியில் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து இயக்கத் தலைவர் குணசேகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக சேலம் - புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிக்குச் செல்லும் சாலையில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதால், சாலை போக்குவரத்து அதிகளவில் உள்ளது. புவனகிரி கடைவீதியானது காவல் நிலையத்தில் இருந்து, பஸ் நிலையம் கடலுார் சாலை வரை தொடர்கிறது.இந்த சாலை ஆக்கிரமிப்பினால் குறுகிய சாலையாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.அதே போன்று, புவனகிரி பாலக்கரை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கும் அருகில் இருபுறமும், எதிர் புறமும் ஆக்கிரமிப்பினால், சாலை மிகவும் குறுகியுள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த பாதிப்படைகின்றனர்.பல்வேறு சமூக அமைப்புகளின் கோரிக்கையின் பேரில் மாநில நெடுஞ்சாலை துறையினர், புவனகிரி கடை வீதி முழுவதும் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்தனர்.ஆனால், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, புவனகிரி பகுதியில் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவவில் கூறப்பட்டுள்ளது.
02-Apr-2025