உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிண்டி பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கிண்டி பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் : சென்னை, கிண்டியில் செயல்படும் பயிற்சி நிறுவனத்தில் உயர் கல்வியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் சென்னை, கிண்டியில் செயல்படும் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ம் ஆண்டிற்கான உயர்கல்வியில் உடனடி சேர்க்கை முகாம் 05.05.2025 முதல் 07.05.2025 வரை நடக்கிறது.விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பயிற்சியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கடலுார் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம்.விண்ணப்பங்களை முகாம் நடக்கும் நாளில் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். அரியலுார் மற்றும் உளுந்துார்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் காலணி உற்பத்தி புதிய ஆலை விரைவில் செயல்பட உள்ளதால் இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 9677943633, 9677943733 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை