உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் மருந்தகம் அமைக்க 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் மருந்தகம் அமைக்க 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கடலுார்: முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் கடலுார் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஜெனரிக் உள்ளிட்ட பிற மருந்துகள் குறைந்த விலையி்ல மக்களுக்கு கிடைத்திட, முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்/டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் நேற்று 5ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது வரும் 10ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை