மேலும் செய்திகள்
அறிவியல் நாடக திருவிழா மாவட்ட அளவில் போட்டி
13-Sep-2025
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்ற த.வீ.செ., மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ., மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் வெற்றி பெற்றனர். மாணவர் மனோபாலா, குறுவட்ட அளவிலான ஈட்டி எறிதலில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். பின், மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலமாக மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் நடந்த விழாவில், த.வீ.செ., கல்விக்குழும செயலாளர் செந்தில்நாதன் பரிசு வழங்கி னார். விழாவில், கல்விக்குழும இயக்குனர் ஆர்த்தி சுரேஷ், பள்ளி முதல்வர் விக்டர் ராஜ், உடற்கல்வி இயக்குனர் கவுதம் உடனிருந்தனர்.
13-Sep-2025