மேலும் செய்திகள்
பண்ருட்டி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் சாதனை
19-May-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பூதங்குடி எஸ்.டி. சீயோன் பள்ளியில் 113 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் திக்ஷயா, கவுசிக்ராஜ் 496 மதிப்பெண் பெற்று முதலிடமும், பூமிகா 495 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் தேவி, செல்வபிரியா, அபிநயா ஆகியோர் மூன்றாமிடத்தை பிடித்துள்ளனர்.மேலும், 58 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 48 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பள்ளி தாளாளர் டாக்டர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின், தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பெற்றோர்கள் மத்தியில் கவுரவிக்கப்பட்டனர்.
19-May-2025