உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் சாதனை

கடலுார்: ஜே.இ.இ., மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அரிஸ்டோ பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.2025 ஏப்ரல் மாதத்தில் நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில் கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவன் பிரதீஷ் 98.23 சதவீதம் மதிப்பெண் பெற்று கடலுார் மாவட்டத்தில் முதலிடம், சஞ்சய் 97.48 சதவீதம், விஷால் 94.69 சதவீதம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும், அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக சதவீத மதிப்பெண் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளியின் தலைவர் சிவக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். அரிஸ்டோ பள்ளியில் பணியாற்றும் அனுபவமிக்க நீட், ஜே.இ.இ., தேர்வு பயிற்றுனர்கள் அளித்த பயிற்சியே வெற்றிக்கு காரணம் என மாணவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளில் அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை