கஜகஸ்தான் பெண்ணை கரம் பிடித்த அரியலுார் இளைஞர்
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் நடந்த மா.கம்யூ., மாவட்ட மாநாட்டில், கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை, அரியலூர் மாவட்ட இளைஞர் திருமணம் செய்து கொண்டார்.அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், சரஸ்வதி தம்பதியின் மகன் பிரபாகரன், 33. இவர், கடந்த 3 ஆண்டு களுக்கு மேலாக ஷார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த அய்டானா ஷயக்மேதோவா என்ற பெண்ணுடன் பிரபாகரனுக்கு காதல் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.அவர்கள் திருமணத்திற்கு இருவர் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். பிரபாகரனின் உறவினர் மா.கம்யூ., நிர்வாகியாக உள்ளார்.அவரது அறிவுறுத்தலின்பேரில், கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மா.கம்யூ., மாவட்ட மாநாட்டில் நேற்று பகல் 11:30 மணியளவில் பெற்றோர், உறவினர்கள், மா.கம்யூ., நிர்வாகிகள் முன்னிலையில் இந்து மதம் முறைப்படி பிரபாகன், அய்டானா ஷயக்மேதோவாவுக்கு தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்.