உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் கோப்பை கபடி போட்டி ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி

முதல்வர் கோப்பை கபடி போட்டி ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி

கடலுார்: முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டி, அரசு ஊழியர்களுக்கான கபடி போட்டியில் கடலுார் ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி பெற்றது. கடலுார் மாவட்ட அளவில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் கடந்த ஆக.26ம் தேதி துவங்கி, செப்.2ம் தேதி வரை நடந்தது. அதில் அரசு ஊழியர்களுக்கான கபடிப்போட்டியில், கடலுார் ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணியை வழி நடத்திச்சென்ற ஆயுதப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கதிரவன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சுப்பிரமணியன் மற்றும் அணியினரை எஸ்.பி.,ஜெயக்குமார் பாராட்டினார். மேலும் கடந்த 2023, 2024, 2025 ஆண்டுகளில் மாவட்ட அளவிலான போட்டியில் கடலுார் ஆயுதப்படை அணி வெற்றிபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி