உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலை பண்பாட்டுத்துறை பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

கலை பண்பாட்டுத்துறை பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

கடலுார்: கடலுாரில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு துறை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது. கடலுார் மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களை சந்தித்து கலைப்பயிற்சி அளித்து, கலைஞர்களின் குறைகளை கேட்டு அறிந்திட, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ராஜாராமன் கடலுார் வந்திருந்தார். அவரை நாட்டுப்புறக் கலைஞர்கள், பேரணியாக கூட்ட அரங்கிற்கு அழைத்துச்சென்றனர். கடலுார் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரிமன்ராஜ் வரவேற்றார். கலைப் பயிற்சி திட்டத்தில் பம்பை காளியாட்டக்கலைஞர் தேவநாதன், தெருக்கூத்து கலைஞர்கள் பக்கிரிசாமி, பொன்னுரங்கம், வீதி நாடகக்கலைஞர் சம்பந்தமூர்த்தி, நாடக ஆசிரியர் வெங்கடேசன், வில்லிசைக்கலைஞர் மணிமேகலை, பொய்க்கால் குதிரையாட்ட கலைஞர் முத்தலிப், பம்பை உடுக்கை கலைஞர்கள் முருகவேல், செந்தில்குமார், கார்த்திகேயன், சுரேஷ், மேடை நாடக கலைஞர் குணாளன், கரகாட்ட கலைஞர் சத்யா, கும்மி கோலாட்ட கலைஞர் சித்ரா, பறை இசைக்கலைஞர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் வடி வேல் ஆகியோர் பங்கேற்றனர். சிலம்பம் ஆசிரியர் ரகுநாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை