உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையாண்டவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் 

மலையாண்டவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் 

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் குழந்தை சுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த மலையாண்டவர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழவினர்கள் செய்திருந்தனர். அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திரசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை