உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு வாலிபர்களை தாக்கியவர் கைது

இரு வாலிபர்களை தாக்கியவர் கைது

புதுச்சத்திரம்: இரு வாலிபர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர். புவனகிரி அடுத்த வடக்குத்திட்டையைச் சேர்ந்தவர் வேதாச்சலம் மகன் கீர்த்திவாசன்,20; இவர் தனது உறவினர் ரூகேஷ் உடன் கடலூருக்கு சென்று துணி எடுத்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த வில்லியநல்லூரைச் சேர்ந்த ஜீவா, பிரவீன,் ராமநாதன்குப்பம் பிரதிமாறன் மூவரும், கீர்த்தி வாசன் பைக்கில் இடிப்பது போல் வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜீவா உள்ளிட்ட மூவரும் சேர்ந்து கீர்த்திவாசன், ரூகேஷ் ஆகியோரை தாக்கினர். புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து பிரதிமாறன்,17 என்பவரை கைது செய்தனர். ஜீவா, பிரவீனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை