உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டசபை பொது கணக்கு குழு : மாவட்டத்தில் இன்று ஆய்வு

சட்டசபை பொது கணக்கு குழு : மாவட்டத்தில் இன்று ஆய்வு

கடலுார் : தமிழ்நாடு சட்டசபை பேரவை பொது கணக்குக் குழுவினர் கடலுார் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் பல்வேறு துறைகள் மூலம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு சட்டசபை பேரவை பொது கணக்குக் குழுவினர் இன்று (25ம் தேதி) ஒரு நாள் பயணமாக வருகை தந்து, ஆய்வு செய்கின்றனர். சட்டசபை பேரவை பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்கள் போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மணப்பாறை அப்துல் சமது, கடலுார் அய்யப்பன், திருத்தனி சந்திரன், பரமத்திவேலுார் சேகர், நாகப்பட்டினம் முகம்மது ஷாநவாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தருகின்றனர். இக்குழுவினர் நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்து விதைப் பண்ணை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகம், சிதம்பரம் அரசு மருத்துவமனை, மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரிடையா க சென்று ஆய்வு செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன், நிலுவையில் உள்ள தணிக்கை பத்திகள் குறித்து ஆய்வு செ ய்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை