உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வு: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார் : கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றனர்.குழுதலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப் பன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், சேகர், முகம்மது ஷாநவாஸ், எம்.பி., விஜய் வசந்த் ஆகியோர் தேங்காய் பட்டிணம் துறைமுகம் மற்றும் கண்ணாடி கூண்டு பாலத்தில் நடந்து வரும் அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.பின், ஆய்வு கூட்டம் நடத்தி பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி., சுந்தரவதனம், சட்டசபை சார்பு செயலாளர் பால சீனிவாசன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், தாரகை கத்பர்ட், மேயர் மகேஷ், டி.ஆர்.ஓ., பாலசுப்பிரமணியம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை