உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி

கடலுார் : கடலுாரில் வங்கி ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் சாவடி பகுதியில் செயல்படும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அருகே அதன் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி மற்றும் மெஷின் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி மேலாளர் அளித்த தகவலின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் நேரில் சென்று சி.சி.டி.வி., பதிவுகளைக் கொண்டு விசாரித்தனர்.அப்போது, மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் சம்மட்டி கொண்டு ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. அலாரம் ஒலித்ததால் தப்பிச்சென்றிருக்கலாம் என தெரிகிறது. மர்ம நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ