உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

குள்ளஞ்சாவடி: வாலிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர் குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மகன் ஜான்சன் அருள்குமார், 37; இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த, 22ம் தேதி, ஜான்சன் சென்ற போது ஜான் போஸ்கோ, செல்வகுமார் ஆகியோர் அவரை ஆபாசமாக திட்டி, கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த ஜான்சன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஜான் போஸ்கோ, செல்வகுமார் ஆகியோர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி