உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழாய் உடைந்து குடிநீர் விரயம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

குழாய் உடைந்து குடிநீர் விரயம் அதிகாரிகள் நடவடிக்கை தேவை

கடலுார்: கடலுார் அருகே கிளிஞ்சிக்குப்பம் கிராமத்தில் கடந்த ஒன்னரை மாதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கடலுார் ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்டது கிளிஞ்சிக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் பாலகிருஷ்ணா நகர்- புதுப்பூஞ்சோலைக்குப்பம் செல்லும் சாலையில் கடந்த ஒன்னரை மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை முழுதும் குடிநீர் வழிந்தோடி குளம்போல் தேங்கி நிற்கிறது.அவ்வழியாக நடந்து செல்பவர்களுக்கும், வாகனம் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பி.டி.ஓ., மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை.இனியாவது குடிநீர் விரயாமாவதை அதிகாரிகள் தடுக்க முன்வர வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ