உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.சி.சி., மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 

என்.சி.சி., மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில் என்.சி.சி., மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தின், கட்டடவியல் துறை சார்பில் அண்ணாமலை செட்டியார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொறியியல் புல என்.சி.சி., மாணவ மாணவிகளுக்கு சால்வை அனிவித்து பாராட்டி, ரொக்க பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் துறைத் தலைவர் மணிகுமாரி தலைமை தாங்கினார். சிவசங்கரி முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் குமரவேல், ஏழிசைவல்லபி, பாலகுமார், ஞானகுமார் மற்றும் ஊழியர்கள் ராஜன், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை