உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதுகள் வழங்கும் விழா

விருதுகள் வழங்கும் விழா

கடலுார்: கடலுாரில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி, தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு அம்பேத்கர் சேவா ரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா நடந்தது. மாநில வழக்கறிஞரணி தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் ராகுல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், புதுச்சேரி மாநில தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ஜெயச்சந்திரன், மாநில செயல் தலைவர் தமிழ் இலக்கியா முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ், சேவையாளர்களுக்கு விருது வழங்கினார். காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ