உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார் : கடலுாரில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஜவான்ஸ் பவன் அருகே துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். பின், விழிப்புணர்வு உறுதிமொழியை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், ஆர்.டி.ஓ., அபிநயா, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், டி.எஸ்.பி., ரூபன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் கூறுகையில், 'மாவட்டத்தில் 4 உள்ளூர் கலைக்குழுக்கள் மூலம் பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ