உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

கடலுார், : கடலுாரில் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சென்னையில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுமி, தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் எதிரொலியாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண், பள்ளி,கல்லுாரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உத்தரவிட்டார். கடலுார் மாநகர பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஏற்றி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.அதையடுத்து தண்ணீர் ஏற்றி செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள், உரிமையாளர்களுக்கு போக்குவரத்துபிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத் நேற்று கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.குறிப்பாக, பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் செல்லும் நேரத்திலும், வெளியே வரும் நேரங்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனங்களை இயக்கக் கூடாது. மதுபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ