மேலும் செய்திகள்
தேசிய ஒற்றுமை ஊர்வலம்
03-Nov-2025
புதுச்சேரியில் போதையில்லா விழிப்புணர்வு ஊர்வலம்
10-Nov-2025
தமிழகத்தில் பல தற்குறிகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
01-Nov-2025 | 9
கடலுார்: கடலுார் மாவட்ட மை பாரத் கேந்திரா சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் 150 பிறந்தநாளையொட்டி ஒற்றுமை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளையோர் அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எஸ்.பி.,ஜெயக்குமார், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஊர்வலம் டவுன் ஹாலில் புறப்பட்டு, செம்மண்டலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரை சென்று திரும்பியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், துாய்மை பாரத மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தன்னார்வலர் ராம்குமார் செய்திருந்தார்.
03-Nov-2025
10-Nov-2025
01-Nov-2025 | 9