மேலும் செய்திகள்
சைபர் கிரைம் விழிப்புணர்வு
09-Sep-2024
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஜான்டூயி மகளிர் கல்லுாரியில் இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.இன்ஸ்பெக்டர் கவிதா மொபைல்போன்கள் பயன்பாடு, ஆபத்து, வங்கிகணக்கு கையாள்வது, குறுஞ்செய்தி குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இணைய வழி நிபுணர் டாக்டர் சஞ்சய் குமார், மாணவியர்களுக்கு விளக்கப்படத்துடன் இணையத்தின் வழியாக நடக்கும் குற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.சைபர் குற்ற உதவி எண் 1930 தொடர்பு கொள்ள அறிவுரை வழங்கினார். இதில் கல்லுாரியின் அறங்காவலர்கள் வெலண்டினா லஸ்லி, எமர்சன் ராபின், கல்லுாரியின் முதல்வர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
09-Sep-2024