விழிப்புணர்வு கூட்டம்
விருத்தாசலம் ;விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராம விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். துணை அலுவலர் விஸ்வநாதன், உதவி அலுவலர்கள் சிவசுப்ரமணியன், ஏழுமலை, நாகராஜன் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.அதில், கோடைகால காய்கறி சாகுபடி, மானாவாரி பகுதி மேம்பாடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், வேளாண் வளர்ச்சித் திட்டம், ஊட்டச்சத்து பண்ணை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.