மேலும் செய்திகள்
பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது
11-Oct-2025
பண்ருட்டி: போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை வழங்கினர். பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தேவநாதன், ஆகியோர் பண்ருட்டி நகர ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்து நகரில் விபத்து ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை ஓட்டுவது குறித்து உரிய அறிவுரை வழங்கினர். அப்போது, மது போதையில் வாகனங்களை இயக்கக்கூடாது; அதிகமான ஆட்களை வாகனத்தில் ஏற்றி சவாரி செய்ய கூடாது; போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது; என அறிவுறுத்தினர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
11-Oct-2025