விழிப்புணர்வு உறுதிமொழி
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் பள்ளியில், 'குழந்தை திருமணங்கள் இல்லா இந்தியா' உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ் ஆசிரியை கயல்விழி, உறுதி மொழி வாசிக்க, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். வீனஸ் குழும பள்ளி தாளாளர் வீனஸ் குமார், துணைத் தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் பிகிரேஸ் பொனிகலா மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.