மேலும் செய்திகள்
போதை பொருள் விற்ற 107 கடைகளுக்கு 'சீல்'
12-Aug-2025
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மந்தாரக் குப்பத்தில் நடந்தது. அர்-ரக்மத் மெட்ரிக் பள்ளியில் நடந்த பேரணிக்கு பள்ளி முதல்வர் ஈவா ஜாஸ்மின் தலைமை தாங்கினார். கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி பேரணியை துவக்கி வைத்தார். பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி பரிசு வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று முக்கிய வீதிகள் வழி யாக பேரணியாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். துப்பரவு ஆய்வாளர் முகமது யாசிக், வரி வசூலர் உமர்பாரூக், ஆசிரியர் ரஞ்சித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Aug-2025