மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
31-Dec-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் அரவிந்தன் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பேரணியை துவங்கி வைத்தார். இதில், தேர்தல் துணை தாசில்தார் வேல்முருகன், கல்லுாரி பேராசிரியர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், போலீசார், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி பாலக்கரையில் நிறைவு பெற்றது. இதில், கல்லுாரி மாணவர்கள், 18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்; என் ஓட்டு விற்பனைக்கு அல்ல; என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
31-Dec-2025