ஐயப்ப பக்தர்கள் பூஜை பொருட்கள் வாங்க ஆர்வம்
கடலுார்: கடலுாரில், கார்த்திகை விரதத்திற்காக ஐயப்ப பக்தர்கள் பூஜை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.இன்று கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் தங்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். கடலுார் நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், ஐயப்ப பக்தர்கள் விரதத்திற்கு தேவையான துளசி மாலைகள், வேட்டி, துண்டுகள் மற்றும் சந்தனம், குங்குமம், பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.