உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜான்டூயி பள்ளியில் இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா

ஜான்டூயி பள்ளியில் இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா

பண்ருட்டி: பண்ருட்டி ஜான்டூயி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் இறகு பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது. பள்ளியின் இறகுபந்து விளையாட்டு அரங்கத்தில் பள்ளி மாணவர்களிடையே இறகுபந்து போட்டி நடந்தது. இதில் ஜான்டூயி குழும பள்ளியான மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்ள்ளி, பனங்குப்பம் சி.பி.எஸ்.இ.பள்ளி, விழுப்புரம் தி நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பைகள், சான்றிதழ்கள் பள்ளி தாளாளர் வீரதாஸ், முதன்மை முதல்வர் வேலண்டினாலெஸ்லி, இணை செயலாளர் நிதின்ஜோஷ்வா, பள்ளி தலைமையாசிரியை சுமதி ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !