உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே: செயின்ட் டேவிட் கோட்டையை புனரமைக்க வந்த ஆங்கிலேய பொறியாளர் பெஞ்சமின் ராபின்ஸ்

 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே: செயின்ட் டேவிட் கோட்டையை புனரமைக்க வந்த ஆங்கிலேய பொறியாளர் பெஞ்சமின் ராபின்ஸ்

கடலுார் தேவனாம்பட்டினம் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட செயின்ட் டேவிட் கோட்டையை புனரமைக்கும் பணியை தமிழக அரசுதுவங்கியுள்ளது. ஆனால், 275 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல கோட்டைகளை புனரமைக்கும் பணிக்காக லண்டனிலிருந்து ஆங்கிலேய பொறியாளர் பெஞ்சமின் ராபின்ஸ் என்பவர் வரவழைக்கப்பட்டார். அவரும் கோட்டையை நேரடியாக ஆய்வு செய்து, அதற்கான திட்டங்களை உருவாக்கிக்கொடுத்தார். அதன்படி புனரமைக்கப்பட்ட செயின்ட் டேவிட் கோட்டை இன்றளவும் பொதுமக்கள்பார்த்து வியக்கும் பாரம்பரிய சின்னமாகவிளங்குகிறது. கிழக்கிந்திய கம்பெனி கடந்த, 1600ம் ஆண்டு முதல், இந்தியா உள்ளிட்ட நாடுகளோடு வணிகம் செய்யத் தொடங்கியது. சூரத்தில் தங்களின்வணிக ஆதிக்கத்தை துவங்கிய கிழக்கிந்திய கம்பெனி, சென்னை, மும்பை, கோல்கட்டா, ஆகிய இடங்களில் வணிக தளங்களை யும்,கோட்டைகளையும் அமைத்தது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கோல்கட்டா வில்லியம் கோட்டை, கடலுார் செயின்ட் டேவிட் கோட்டை,மும்பை கோட்டை ஆகியவை ஆங்கிலேயரின் முக்கிய கோட்டைகளாக விளங்கின. ஆங்கிலேயருக்கு போட்டியாக இருந்த டச்சுக்காரர்கள்,போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்களுடன் வணிகப்போட்டி, அதிகாரப்போட்டியால் அடிக்கடி சண்டைகளும், போர்களும் நடந்தன. இதனால்ஆங்கிலேயரின் கோட்டைகள் சேதமடைந்தன. தாங்கள் சேகரித்த பொன், பொருளை பாதுகாக்கவும், அதிகாரத்தின் சின்னமாகவும் விளங்கிய கோட்டைகளை பாதுகாப்பதில் ஆங்கிலேயர் கூடுதல்கவனம் செலுத்தினர். சண்டைகளில் சேதமடைந்த கோட்டைகளை சீரமைக்க, இந்தியாவிற்கு வந்தவர் தான் சிறந்த ராணுவப்பொறியாளரானபெஞ்சமின் ராபின்ஸ். கடந்த, 1707ம் ஆண்டு இங்கிலாந்தின் பாத் நகரில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். பேராசிரியர் ஹென்றி பெம்பர்டனின்அறிவுரைப்படி, லண்டன் சென்று பயின்று திறமை மிக்க பொறியாளரானார். பாலங்கள், தொழிற்சாலைகளை கட்டமைத்ததுடன், பீரங்கி, கோட்டைகளைவடிவமைக்கும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். கன்னேரியின் புதிய கோட்பாடுகள் என்ற அவரது புத்தகம், அவருக்குபுகழைப்பெற்றுத்தந்தது. கடந்த, 1750ம் ஆண்டு கடலுாருக்கு வந்த பெஞ்சமின் ராபின்ஸ், செயின்ட் டேவிட் கோட்டையையும், பின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும்முழுமையாக ஆய்வு செய்து சீரமைப்பதற்கான தனது திட்ட அறிக்கையை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தவர்,கடந்த, 1751ம் ஆண்டு கோல்கட்டா வில்லியம் கோட்டையை ஆய்வுசெய்து விட்டு கடலுாருக்கு திரும்பினார். ஜூலை 29ம் தேதியன்று, மூன்றுகோட்டைகளையும் பலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்த மேஜையிலேயே பேனாவைக் கையில்பிடித்தபடி உயிரிழந்தார். பல்துறை வித்தகரான பெஞ்சமின் ராபின்ஸ், திருமணமே செய்து கொள்ளாத நிலையில் 44வயதிலேயே கடலுார் செயின்ட் டேவிட் கோட்டையில்உயிரிழந்தார். அவரது ஆசைப்படி, அவரது உடல் லண்டனில் புதைக்கப்பட்டது. இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க பொறியாளர்களால் தான், இந்தியாவில்உள்ள ஆங்கிலேயரின் கட்டுமானங்கள் இன்றும் அவர்களது பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ