பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
கடலுார் : கடலுாரில் பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.பி.ஏஸ்., 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.5,000 ஆகி உயர்த்தி வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்கு கட்டாய பிடித்தம் செய்ய ஊதிய உச்சவரம்பு ரூ.30,000 உயர்த்த வேண்டும். காப்பீடு மற்றும் நிதித்துறையில் அன்னிய முதலீட்டை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் வீரவன்னிய ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் பொதுச் செயலாளர் துரைசாமி, சிப்காட் கார்த்திகேயன், என்.எல்.சி., காண்ட்ராக்ட் சங்க பொதுச் செயலாளர் விக்னேஸ்வரன், என்.எல்.சி., பி.எம்.எஸ்., சங்க பொதுச் செயலாளர் சகாதேவ்ராவ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தபால் துறை மாநில செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.