உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுாலகம் கட்ட பூமி பூஜை

நுாலகம் கட்ட பூமி பூஜை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தில், மாநில நிதிக்குழு திட்டம், மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில், ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய நுாலக கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் திருமாறன் பூமி பூஜையில் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் சிவ சிங்காரவேலு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சற்குருநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கமணி, வார்டு உறுப்பினர் கமலகண்ணன், ஜோதிராஜ், குழந்தைவேல், ராஜதுரை, கந்தசாமி, மகாலிங்கம், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.நுாலகர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி