மேலும் செய்திகள்
அருணாச்சலா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
17-May-2025
மங்களம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
17-May-2025
புவனகிரி: புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நிர்வாக குழுவினர் பாராட்டினர். புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 57 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலமாக இப்பள்ளி 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சியை தக்க வைத்தது. மாணவர்கள் விக்னேஸ்வரன் 497, பிரணவ் 493, சூர்யகுமரன் 491 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அறிவியல் பாடத்தில் 28 பேர், சமூக அறிவியலில் 9 பேர், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தலா ஒருவர் என மொத்தம் 39 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 480க்கு மேல் 13 பேர், 450 முதல் 479 வரை 33 பேர், 400 முதல் 450 வரை 48 பேர் மதிப்பெண் பெற்றனர். தேர்வில் சாதித்த மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் தாளாளர் ரத்தினசுப்பிரமணியர், அறக்கட்டளை செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சரவணன், பள்ளி மேலாண்மைக்குழு இயக்குனர் முத்துக்குமரன் (பாடத்திட்டங்கள்), பள்ளி முதன்மை கல்வி ஆலோசகர் செல்வராஜ், தலைமைஆசிரியை கவிதா பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.
17-May-2025
17-May-2025