உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பெண்ணாடம்: பெண்ணாடம் முக்குளம், பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு மேல், இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, மகா தீபாராதனை, காலை 9:00 மணியளவில் கடம் புறப்பாடுடன் பிடாரி செல்லியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மகாதேவி, கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை