உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் விபத்து: பேராசிரியர் பலி

பைக் விபத்து: பேராசிரியர் பலி

வேப்பூர் : திருச்சியைச் சேர்ந்தவர் பிரசன்னா, 47; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் படிக்கும் தனது மகளைப் பார்க்க, நேற்று காலை தனது பி.எம்.டபிள்யூ பைக்கில் சென்றார்.நேற்று காலை 7:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த கழுதுார் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதினார். இதில் படுகாயமடைந்த பிரசன்னா சம்பவ இடத்திலேயே இறந்தார்.வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை