சிதம்பரம் கோர்ட்டில் பைக் திருடியவர் கைது
கிள்ளை:சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் புதுப்பூலாமேடு பகுதியை சேர்ந்தவர் அறிவொளி, 59; சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிப்புரிகிறார். இவர், கடந்த 16ம் தேதி சிதம்பரம் அடுத்த சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்திவிட்டு கோர்ட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தப்போது காணவில்லை.இதுகுறித்து, அறிவொளி கொடுத்த புகாரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் கிள்ளை அடுத்த சி.முட்லுார் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, சிதம்பரம் நோக்கி பைக்கில் வந்த நபர் குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லுார் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் நாகராஜ், 25; என்றும், சிதம்பரம் கோர்ட்டில் அறிவொளிக்கு சொந்தமான பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார். அதையெடுத்து, போலீசார் நாகராஜை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.